அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாண சர்ச்சில் துப்பாக்கி சூடு; 27 பேர் பலி


அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாண சர்ச்சில் துப்பாக்கி சூடு; 27 பேர் பலி
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வில்சன் கவுண்டி பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு துப்பாக்கி ஒன்றுடன் வந்த மர்ம நபர் ஒருவர் ஆலயத்திற்குள் கூடியிருந்த மக்களை நோக்கி சுட்டுள்ளார்.
இதில், 27 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தினை அடுத்து துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் கொல்லப்பட்டார். ஆனால் அவர் போலீசாரால் கொல்லப்பட்டாரா? அல்லது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என தகவல் தெரியவரவில்லை.
இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் ஆலய பாதிரியாரின் 14 வயது மகள் அன்னாபெல் உயிரிழந்துள்ளார். 20 பேர் வரை காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Comments