Posts

Showing posts from November, 2017

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை உயிரோடு எரித்து கொல்ல முயன்ற பெண் கைது

Image
ராஜபாளையம் வேட்டைபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி(வயது45). இவரது கணவர் சுந்தரமகாலிங்கம் 15 வருடங்களுக்கு முன்பு மனைவியை பிரிந்து அருப்புக்கோட்டைக்கு சென்று விட்டார். அங்கு வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். பாக்கியலட்சுமி தனது மகள் கற்பகஜோதியுடன்(21) வசித்து வருகிறார். டிப்ளமோ படித்து முடித்த கற்பகஜோதி அந்தப்பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகிறார்.  இந்த நிலையில் நூற்பாலையில் வேலை செய்யும் ஒருவருடன் கற்பகஜோதிக்கு காதல் மலர்ந்துள்ளது. இது தாயார் பாக்கியலட்சுமிக்கு தெரியவந்ததும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளை கண்டித்துள்ளார். ஆனால் காதலை கைவிட கற்பகஜோதி மறுத்து தாயுடன் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினமும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போதும் பாக்கியலட்சுமி காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். ஆனால் காதலில் உறுதியாக இருந்த கற்பகஜோதி அதற்கு இடையூறாக இருக்கும் தாயாரை கொலை செய்ய துணிந்தார். வீட்டில் இருந்த மண் எண்ணெய்யை எடுத்து தாயாரின் மீது ஊற்றி தீவைத்து விட்டார். உடல் கருகி...

குப்பையில் கிடந்த பூச்சு மருந்தை குளிர்பானம் என குடித்த 4 வயது சிறுவன் பலி

Image
குப்பையில் கிடந்த பூச்சு மருந்தை குளிர்பானம் என குடித்த 4 வயது சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம்அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- திருத்தணி அடுத்த பள்ளிப்பட்டு கொளத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ஜெயந்தி காலனியை சேர்ந்தவர் பாபு. கூலி தொழிலாளி. இவரது மகன் அகிலன் என்கிற கதிர்வேலன் (வயது 4). இன்று காலை வீட்டின் அருகே அந்த பகுதி சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டு அந்த பகுதிகளில் உள்ள குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் ஒரு இடத்தில் சேர்த்து வைத்திருந்தனர்.அப்போது குளிர்பானம் பாட்டில் போன்று ஒன்று கிடந்துள்ளது. இதைபார்த்த அகிலன் அது குளிர்பானம் என்று நினைத்து அதை எடுத்து அருந்தியுள்ளான். பின்னர் வீட்டிற்கு வந்த சிறுவன் சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளியபடி மயங்கி விழுந்துள்ளான். இதை பார்த்த அவரது பெற்றோர் அலறி அடித்துக்கொண்டு சிறுவனை தூக்கிக்கொண்டு பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்...

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாண சர்ச்சில் துப்பாக்கி சூடு; 27 பேர் பலி

Image
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வில்சன் கவுண்டி பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. இங்கு துப்பாக்கி ஒன்றுடன் வந்த மர்ம நபர் ஒருவர் ஆலயத்திற்குள் கூடியிருந்த மக்களை நோக்கி சுட்டுள்ளார். இதில், 27 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தினை அடுத்து துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் கொல்லப்பட்டார். ஆனால் அவர் போலீசாரால் கொல்லப்பட்டாரா? அல்லது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என தகவல் தெரியவரவில்லை. இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் ஆலய பாதிரியாரின் 14 வயது மகள் அன்னாபெல் உயிரிழந்துள்ளார். 20 பேர் வரை காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

சவுதி அரேபியா விமான நிலையத்தை குறிவைத்து ஏவப்பட்ட ஏவுகணை இடைமறிக்கப்பட்டு அழிப்பு

Image
ஏமனில் கிளர்ச்சி நேரிட்டு உள்ள பகுதியில் இருந்து சவுதி அரேபியாவின் இதயப்பகுதியாக விழங்கும் தலைநகரை மையமாக வைத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வீசப்பட்டு உள்ளது, இந்த ஏவுகணை சரியான நேரத்தில் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அழிக்கப்பட்ட ஏவுகணையின் சிதைவு பாகங்கள் தரையில் விழுந்தது. இந்த ஏவுகணை தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பு ஏற்று உள்ளனர்.  சவுதியின் தலைநகரிலே பெரும் தாக்குதலை முன்னெடுக்க வேண்டும் என திட்டமிட்டு ஹவுதி கிளர்ச்சியாளார்கள் ஏவுகணையை வீசிஉள்ளனர்.  ஏமனில் அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகிறார்கள். அங்கு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா தலைமையில் கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால் சவுதி அரேபியாவிற்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மத்தியில் கடும் கோபம் காணப்படுகிறது. கூட்டுப்படைகளின் வான்வழி தாக்குதலுக்கு பழி தீர்க்கும் முயற்சியாக கிளர்ச்சியாளார்கள் தரப்பில் ரியாத்தை குறிவைத்து ஏவுகணை வீசப்பட்டு உள்ளது.  ஹவுதி கி...